Subscribe Us

header ads

அரசியலுக்கு வருகிறார் சங்ககாரா....

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்ககார விரைவில் அரசியலில் கால் பதிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
எதிர் வரும் வருடம் நடைபெறும் உலககிண்ண போட்டியுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெரும் சங்க பிரதான கட்சி ஒன்றுடன் இணைந்து அரசியலில் பிரவேசிக்க உள்ளார்.
 ஐக்கிய தேசிய கட்சியின் பாத்ததும்பர தேர்தல் தொகுதியின் அமைப்பாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சித்ரா மன்திலக்க கட்சி தாவிய பின்னர் நிலவும் தொகுதி  வெற்றிடத்துக்கு சங்கா நியமிக்கப்பட இருப்பதோடு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளராக களம் இறங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நாட்டு பற்றுடன் கிரிக்கட் விளையாடும் போது அரசியலில் குதிப்பது ஆரோக்கியமான விடயம் இல்லை என்பதால், நாட்டின் தேசியவிளையாட்டு வீரராக இருக்கும் போது அரசியல் ஈடுபடுவதில்லை என சங்க உறுதியாக உள்ளார்

Post a Comment

0 Comments