ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நெருக்கமான சகோதரர் ஒருவர் பொது ஆபேட்சகர் மைத்ரீபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பது தொடர்பில் ராஜித சேனாரத்னவுடன் நம்பிக்கைக்குரிய ஒருவர் மூலமாக கலந்துரையாடலில் ஈடுபட்டுவருவதாக தபவல் கிடைத்துள்ளது. இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் மேலும் இரு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாகவும் அறியவருகிறது.
நல்லாட்சியொன்றை நிறுவவதற்கு மைத்ரீபால சிறிசேனவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க தயாராகவிருப்பதாகவும் இதுவரை நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவற்கு முழு ஒத்துழைப்பு வழஙகுவதாகவும் அதற்காக அனைத்து விடயங்களையும் தயக்கம் இன்றி வெளியிடுவதற்கும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இவர் தமது சகோதரர் மஹிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக தேர்தல் பிரசாரங்களில் மும்முரமாக ஈடுபட்டுவந்த நிலையில் அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இருந்தும் தற்போது அகற்றப்பட்டுள்ளார். இவர் தொடர்பில் எந்தாவரு அரச மற்றும் தனியார் ஊடகங்கிளிலும் தற்போது பேசப்படாத நிலையில் இறுதித் தருணத்தில் கட்சித் தாவலை மேற்கொள்வார் எனவும் கூறப்படுகிறது.
-நன்றி ReadSriLanka
-நன்றி ReadSriLanka


0 Comments