ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்காக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக பிரபல பொலிவுட் நடிகர் சல்மான் கான் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.
ஜனாதிபதியின் பிரசார வேலைகளை முன்னின்று ஏற்பாடு செய்துவரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் புதல்வருமான நாமல் ராஜபக்ச மூலம் இந்த அழைப்பிதழ் அனுப்பட்டு இருந்த நிலையில் இன்று சல்மான்கான் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
சற்றுமுன் பொரல்லை பிரதேசத்தில் ஆரம்பமாகியுள்ள தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்ள பிரபல பொலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரபல பொலிவுட் நடிகை ஜெக்குளின் பெர்னாண்டஸ் ஆகியோர் கலந்துகொள்வதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன…


0 Comments