Subscribe Us

header ads

ஹக்கீம், ரிசாத்தை கடுமையாக எச்சரிக்கும் கோத்தபாய!


கடந்த கால ஜனாதிபதி தேர்தலின் போதும் ஆதரவு வழங்காத ரவூப் ஹக்கீம், தோல்வியின் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து அனைத்து வரபிரசாதங்களையும் அனுபவித்ததாக கோத்தபாய தெரிவித்துள்ளார்.


தற்போது எதிரணியுடன் இணைந்து கொண்டுள்ள ரவூப் ஹக்கீமையோ, ரிசாத் பதியுதீனையோ, மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்குத் தான் விடமாட்டேன் என்று கோத்தபாய சூளுரைத்துள்ளார்.

2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரவூப் ஹக்கீம், மஹிந்தவுக்கு எதிராக பணியாற்றினார். தேர்தலில் மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதும், அவருடன் இணைந்து அமைச்சுப் பதவியையும், எல்லா சலுகைகளையும் பெற்றுக் கொண்டார்.

மீண்டும் 2010ம் ஆண்டு, சரத் பொன்சேகாவை ஆதரித்தார். அந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்ற பின்னர், அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு எல்லா சலுகைகளையும் பெற்றுக் கொண்டார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முஸ்லிம் பிரதிநிதிகள் பெறாத சலுகைகளையெல்லாம் இவர்கள் பெற்றனர்.

இவர்களின் செயற்பாடுகள் இஸ்மாமிய மதத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதனைத் தான் இஸ்லாம் போதிக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இனிமேல், வெளியே போனவர்களை மீண்டும் எடுக்கமாட்டோம். இதனை நான் உறுதிப்படுத்துகிறேன். அவர் மீண்டும் வருவதற்கு நான் விட மாட்டேன் எனவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை அவர் வெளியிட்டார்.

Post a Comment

0 Comments