எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ(Cairo) அருகே உள்ள அஷ்பகேயா(Ashbakeya) என்ற பகுதியில் நேற்று முன்தினம், பொது குளியல் அறை ஒன்றில் சிலர் ஓரினச்சேர்க்கை உறவில் ஈடுபடுவதாக அந்நாட்டு பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் சோதனையிட்ட போது, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட 33 பேரை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், தீய ஒழுக்கம் மேலும் பரவாமல் கட்டுப்படுத்தவே அவர்களை கைது செய்துள்ளோம் என கூறியுள்ளார்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice
0 Comments