Subscribe Us

header ads

சருமத்தை மென்மையாக்கும் பால் ஏடு


பால் உடலுக்கு எப்படி சக்தியைக் கொடுக்கிறதோ, அப்படியே நம் சரும அழகுக்கும் பால் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பால் சிறத்ந மாய்சரைசராகவும், க்ளென்சராகவும் பயன்படுகிறது.

சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும் பால் உதவும். ஆடை எடுக்கப்பட்ட பால் எல்லாவித சரும வகைக்கும் ஏற்றது. முகத்தில் பேக் போடும் பவுடருடன், பால் கலந்து உபயோகிக்கலாம். ஏடோடு இருக்கும் பால் உலர் சருமத்திற்கு ஏற்றதாகும்.

எண்ணெய் சருமத்திற்கு ஆடை எடுக்கப்பட்ட பால் அல்லது மோர் உபயோகிக்கலாம்.

சரும வறட்சி உள்ளவர்கள் பால் ஏடு எடுத்து தினமும் முகத்தில் தடவி உளர்ந்த பின் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள வறட்சி நீங்கி சருமம் பொலிவடைவதை காணலாம்.

கண்களின் அடியில் உள்ள கருவளையத்தைப் போக்க பாலாடை க்ரீம் பூசுவது நல்லது. (இது வெளியில் தனியாகக் கிடைக்கும்). தோலில் அடிக்கடி அரிப்பு ஏற்படுபவர்களுக்கு பால் மிகவும் நல்லது.

காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து, முகத்தில் பூசி சிறிது நேரத்தில் குளிர்ந்த நீரில் கழுவினால், முகம் பளிச்தான். எண்ணெய் வழியும் சருமத்திற்கு மோரில் பஞ்சை நனைத்து முகம், கழுத்தில் தடவி 10 அல்லது 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும்.

/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments