ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பணிகளில், வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தேசிய கீதத்தின் வரிகள் பயன்படுத்தப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
உக்குவெல பிரதேசங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையின் சொத்துக்களையும் வளங்களையும் கொள்ளையிட்ட அரசாங்கம், தற்போது தேசிய கீதத்தின் வரிகளையும் திருடிவிட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார். நாட்டை கௌரவிக்கும் வகையில் பாடப்பட்டு வரும் தேசிய கீதம், தனிப்பட்ட ஒருவரின் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றமை அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் தெரிவித்த ரணில் விக்ரமசிங்க இது தொடர்பாக வழக்குத் தொடர தீர்மானித்துள்ளதாகவும் கூறினார்

0 Comments