இலங்கையில் ஒருமுன்மாதிரி இஸ்லாமிய்ய பல்கலைக்கழகம் என்ற இலக்குடன் 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி 22 மாணவர்களுடன் இஸ்தாபிக்கப்பட்ட மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி அல்லாஹ்வின்அருளினால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதியுடன் தனது கல்விப்பயணக்தில் 28 வருடங்களை அடைய உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இன்று இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியின் கல்விப்பயணம் அல்லாஹ்வின் அருளால் நாட்டிற்கான வளவாளர்களை உருவாக்குவதிலும்; சமூகத்தின் கல்வித் தேவையினை பூர்த்தி செய்வதிலும் காத்திரமான பணியினை ஆற்றி வருகின்றது.
எமது கல்லூரியில் இருந்து கல்விகற்று வெளியேறிய பல பட்டதாரிகள் இன்று கல்வி மற்றும் மொழில் நிமித்தம் வெளிநாடுகளில வசித்துவருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பினை தொடர்ந்துவருகின்றனர்.
பழையமாணவர் அமைப்பு –AALUMNI ASSOCIATION OF
MADAMPE ISLAHIYYAH இவ்வாரு நாடு கடந்துவாழும் கல்லூரியின் சொந்தங்களை இணைப்பதற்கான கல்லூரி நிருவாகமும் பழைய மாணவர் அமைப்பும் பல வேளைத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றது. இவற்றில் மிக முக்கியமானது கடல் கடந்த பழைய மாணவர் அமைப்பாகும்.
ஒரு கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பு என்பது அக்கல்லூரியின் மிக முக்கிய அங்கமாகும். அந்த வகையில் கால் நூற்றாண்டைதாண்டிய இஸ்லாஹிய்யாவின் பயணத்தில் அதனது பழைய மாணவர் அமைப்பின் பங்களிப்பும் ஒத்தாசையூம் மிகக்காத்திரமாக அமைந்துள்ளமை கண்கூடாகும்.
1993 ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாஹிய்யாவின் பழைய மாணவர் அமைப்பு 2015 இவ்வருடத்துடன் 21 வருடங்களை பூர்த்திசெய்கின்றது. இன்று 350 இற்கும் அதிகமான உருப்பினர்களை கொண்டுள்ள பழைய மாணவர் அமைப்பின் பணி மேலும் எமது சமூகத்திற்கும் நாட்டிற்கும் காத்திரமாக வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் இஸ்லாஹிய்யா நிருவாகவூம் மற்றும் அதன் பழையமாணவர் அமைப்பான ALUMNI ASSOCIATION உம் பல் வேறு திட்டங்களை வகுத்து எதிர்காலங்களில் செயற்பட பிரயத்தனம் எடுத்துள்ளது.
மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பின் கிளை இலங்கை நாட்டில் மாத்திரம் அன்றி சவூதி அரேபிய்யா ,சுடான் , குவைட், எகிப்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிளும் இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். அந்த வகையில் கட்டாரில் செயற்பட்டு வருகின்ற இஸ்லாஹிய்யாவின் பழைய மாணவர் அமைப்பு அதனது 2014 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டத்தினை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2015 ஜனவரி மாதம் 02 ஆம் திகதி கட்டாரில் ஏற்பாடு செய்ய தீர்மானித்துள்ளது.
ALUMNI ASSOCIATION QATAR BRANCH:
ANNUAL GATHERING MEETING 2014
பொதுக் கூட்டம் 2014
கட்டார் கிளை ஏற்பாடு செய்யூம் வருடாந்த பொதுக்கூட்டம் 2014
இஸ்லாஹிய்யா பழைய மாணவர் அமைப்பில் 180 அதிகமான பட்டதாரிகள் மற்றும்க ல்லூரியில் 02 வருடங்களுக்கு அதிகமான கல்வியாண்டினைப் பூர்த்தி செய்தவர்கள் அங்கம்வகிக்கின்றனர்.
ஓவ்வொரு வருடமும் நடுப்பகுதியில் பழைய மாணவர் அமைப்பின் பொதுக் கூட்டம்யுANNUAL GENRAL MEETING (AGM) நடைபெறுகின்றது மேற்படி பொதுக்கூட்டத்தில் அடுத்த வருடத்திற்கான புதியநிர்வாக் தெறிவூ ,புதிய அங்கத்தவர்கள் உள்வாங்கள் மற்றும் கல்லூரியின் அபிவிருத்திக்கு புதிய திட்டங்கள் முன்மொழிதல் உட்படகலை நிகழ்ச்சி போன்ற பல்வேறு அம்சங்கள் நடைபெறுகின்றன.
இவை தவிர்ந்து வெளிநாடுகளில் நடைபெறும் பழைய மாணவர் அமைப்பின் பொதுக்கூட்டத்தில் தேசிய ரீதியில் தெரிவூ செய்யப்பட்ட நிருவாகக்குழுவிற்கான பொளதீகவளங்களை இணைத்தல் மற்றும் தகவல் தொடர்பாடலினை மேற்கொள்ளல் நாடு கடந்து வாழும் இஸ்லாஹிய்யா சொந்தங்களுக்கான பாலமாக செயற்படல் போன்ற வேளைத்திட்டங்களை அமைப்பு ரீதியான மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் இன்ஷா அல்லாஹ் 2014 ஆம் ஆண்டிற்கான இஸ்லாஹிய்யா பழைய மாணவர் அமைப்பின் கட்டார் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் 2015 ஜனவரி மாதம் 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கட்டார் இல் அமந்துள்ள FANAR பனார் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இன்ஷா அல்லாஹ்..
மேற்படி வருடாந்த பொதுக்கூட்டத்திற்கு இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியில் பட்டம் பெற்றபட்டதாரிகள் மற்றும் இரண்டு வருடங்கள் கல்வி கற்று விட்டு கட்டார் நாட்டில் வசிப்பவர்கள் கலந்து கொள்ள முடியும்.
எனவே தயவு செய்து உங்களுடைய விடு முறை தினத்தை எங்கள் இஸ்லாஹிய்யா உறவூகளோடு மகிழ்சிகரமாக செலவிடுவதற்கு உங்கள்வரவை கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். 00974 66113065, 00974 70212491, 00974 30399695


1 Comments
2015 ஜனவாரி 2ஆம்திகதி முடிந்து விட்டது.இப்பொது எதற்கு இந்த விளம்பரம்
ReplyDelete