Subscribe Us

header ads

"ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே" அர்த்தம் என்னவென்று தெரியுமா???

உண்மை அர்த்தம்:

நன்மைகள் ஆக்கப்படுவதும், தீமைகள் அழிக்கப்படுவதும் பெண்ணாலே என்பதுதான் உண்மையான பொருள். பெண் நல்லதைச் செய்வாள், நல்ல எண்ணங்களைக் கொண்டு நல்ல குடும்பத்தை உருவாக்குவாள். நல்ல நிலைக்கு தானும் உருவாகி மற்றவர்களையும் உருவாக்குவாள்.

தீமை நடக்கும் இடங்களில் குற்றங்களைத் தட்டிக் கேட்டுத் தீமையை அழித்திடுவாள். பெண்களை தெய்வம் என்று சொல்வதும், இந்த மொழியின் அடிப்படையில் தான். தெய்வமும் நல்லதை ஆக்கி தீயதை அழிப்பதால் அப்படி ஒப்பிட்டனர்.

நாம் அறிந்த அர்த்தம் :

நன்மை ஆக்கப் பெறுவதும் , நன்மை அழிக்கப் பெறுவதும் பெண்ணாலே. அதாவது தீமை நடக்கையில் நல்லதை பெண் அழித்துவிட்டாள் என பொருள் புரிந்து கொள்வது. இப்படி தான் நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் தவறான இடங்களில் இந்த மொழியை பயன்படுத்திப் பெண்ணால் அழிந்தது என்கிறோம்.

இனியேனும் தெரிந்துக்கொள்வோம், நன்மை ஆவதும் தீமை அழிவதும் பெண்ணாலே....


/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments