Subscribe Us

header ads

இலங்கை - இந்தியா முதலாவது ஒருநாள் போட்டி இன்று

இலங்கை - இந்தியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இடம்பெறவுள்ளது.

மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிரான தொடரை அரைவாசியில் ரத்து செய்து விட்டு நாடு திரும்பியது. 
இதைத்தொடர்ந்து இலங்கை அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கை அணி இந்தியாவுடன் 5 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 
இந்திய அணியின் தலைவர் டோனிக்கு முதல் 3 போட்டிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வீராட் கோலி அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதால் இத் தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய 'ஏ" வெற்றி பெற்று இருந்ததால் நம்பிக்கையுடன் இருக்கிறது.
இந்திய அணிக்கு எல்லா வகையிலும் இலங்கை அணி சவாலாக விளங்கும். ஏனென்றால் ஜெயவர்தன, சங்கக்கரா, அணித் தலைவர் மெத்தியூஸ், டில்சான், திஸர பெரேரா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
வீராட்கோலி, ரகானே, ரெய்னா, அம்பதி ராயுடு, ஷிகர் தவான், ஜடேஜா ஆகியோர் துடுப்பாட்டத்திலும் உமேஷ்யாதவ், அஸ்வின், அமித் மிஸ்ரா ஆகியோர் பந்து வீச்சிலும் பலம் சேர்ப்பார்கள்.
 பகல்- இரவு போட்டியாக இடம்பெறுவதால் இந்த ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகிறது. பனிபொழிவால் 5 போட்டிகளுமே 1 மணி நேரத்துக்கு முன்னர் தொடங்குகிறது. 
இரு அணி வீரர்கள் வருமாறு:

இலங்கை: மெத்தியூஸ் (அணித்தலைவர்), உபுல் தரங்க, டில்சான், சங்கக்கரா, ஜெயவர்தன, திஸர பெரேரா, சத்துரங்க டிசில்வா, நிரோஷன், லகிரு கமகே, குலசேகர, ரந்தீவ், குஷல் பெரேரா, அசான் பிரியரஞ்சன், தம்மிக்க பிரசாத், பிரசன்னா.

இந்தியா: வீராட்கோலி (அணித் தலைவர்), ஷிகர்தவான், ரகானே, ரெய்னா, அம்பதி ராயுடு, ரவிந்திர ஜடேஜா, விர்த்திமான்சகா, அஸ்வின், உமேஷ்யாதவ், இஷாந்த்சர்மா, அமித்மிஸ்ரா, குல்கர்னி, முரளிவிஜய், அஸ்கர் பட்டேல், வருண் ஆரோன்.
/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments