இப்புகைப்படத்தில் உள்ள கட்டிடம் என்னவென்று எவரேனும் அறிவீர்களா. . .?
பெரும்பாலானவர்களின் பதில் நம் நாட்டில் உள்ள ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் என்பதாகத் தான் இருக்கும்.
ஆனால் இக்கட்டிடம் தாஜ்மஹாலின் நகலாகும். ஆம் , அரபு நாடான குவைத்தில் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள தாஹியா அப்துல்லாஹ் முபாரக் என்னும் நகரத்தில் அமைந்துள்ள சித்தீகா ஃபாத்திமா ஜஹ்ரா மசூதியாகும். !
வெளிப்புறத்தில் மட்டுமே பார்ப்பதற்க்கு தாஜ்மஹால் போன்ற அமைப்பு கொண்டது இப்பள்ளிவாசல்.
3200 சதுர அடி நிலப்பரப்பில் , 2007ம் ஆண்டு கட்டத் துவங்கி 2011ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது..
ஈரானிலிருந்து வரவழைக்கப்பட்ட மார்பில் கற்களில் 8 மாதம் இந்திய மற்றும் ஈரான் கலைஞர்கள் கலை வேலைப்பாடு செய்துள்ளனர்.
உள்ளே சுமார் 3500 ஆண்களும், 500 பெண்களும் பிரார்த்தணை செய்யும் வண்ணம் கட்டமைப்புள்ளது. மசூதி முழவதும் குளிர் சாதனங்கள் பொறுத்தப்பட்டுள்ளது.
மசூதிக்கு அருகில் நூலகமும், சுமார் 1000 கார்களை பார்க்கிங் செய்யக்கூடிய வசதியும் உள்ளது.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice



0 Comments