Subscribe Us

header ads

புற்றுநோயால் பாதிக்கப்பட்டபின் பொடிபில்டராக மாறிய இளைஞன்

15 வயதில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இளைஞனொருவன் அதன் பின் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு பொடிபில்டராக விளங்குகிறான்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஸாச் ஸெய்லர் எனும் இச்சிறுவன் 2010 ஆம் ஆண்டு புற்றுநோயினால் பாதிக்கப்பட்டான். அவனின் எடை 100 இறாத்தலாக குறைவடைந்தது. 

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற ஆரம்பித்த நிலையில், அவன் உடற்பயிற்சிலும் கவனம் செலுத்தத் தொடங்கினான். இரு வருடங்களில் ஸெய்லரின் உடல்நிலை சிறப்பாக முன்னேற்றமடைந்தது. தற்போது 20 வயதான ஸாச் ஸெய்லர், சிறந்த உடற்கட்டுடன் காணப்படுகிறார்.

எனக்கு கதிர்வீச்சு சிகிச்சை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நான் பளு தூக்குதல் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். அதன் மூலம் எனது உடல் எடையை அதிகரிக்கலாம் என நம்பினேன். ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சியில் ஈடுபட்டேன். அதேவேளை தினமும் சுமார் 4000 கலோரி உணவை உட்கொண்டேன்" என ஸெய்லர் கூறுகிறார்.

Post a Comment

0 Comments