கஸகஸ்தானில் உள்ள அடிராவு என்ற பகுதியில் 32 வயதுடைய கோண்ட்ரேட் கொலுபேவ் என்ற நபர், வீதியில் சென்றுகொண்டிருந்த இரு பெண்களை இடைமறைத்து, அவர்களிடம் உடலுறவு கொள்ள என விலை என கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த பெண்ணொருவர் தனது ஒரு கையால் பலமாக முகத்தில் தாக்கியுள்ளார். இதனையடுத்து 32 வயதுடைய குறித்த நபர் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர் இரு பெண்களும் குறித்த நபரின் அந்தரங்க உறுப்பையும் காலால் மிதித்து விட்ட அவ்விடத்தில் இருந்து சென்றுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, திடீர் என தாக்குதலுக்குள்ளானதால் மூளை அதிர்ச்சி ஏற்பட்டு நபரின் உடல் செயற்பாடு தடைபட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தை வீடியோ காட்சியாக பதிவு செய்த நபரான அனடோலி பிரவோஸ்கி என்பர் கருத்து தெரிவிக்கையில், நான் எனது காதலிக்காக வீதியில் காத்துகொண்டிருந்தேன். இதன்போது இரு பெண்களுடன் நபர் ஒரு வாக்குவாதத்தில் ஈடுபடுவதை அவதானித்தேன். இதன்போது அப்பெண்களில் ஒருவர் திடீர் என ஒரு கையால் முகத்தில் தாக்கினால். இதனால் குறித்த நபர் மயக்கமுற்று கீழே விழுந்தார். பின்னர் அப் பெண்கள் அவரின் அந்தரங்க உறுப்பை காலால் மித்து விட்டு அவ்விடத்தில் இருந்து சென்றனர். நான் இதனை வீடியோவாக பதிவு செய்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தேன் என்றார்.

0 Comments