நான்கு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும்
நன்மையானது, ஒரே ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் என்பது
தெரியுமா?மழைக்காலங்களில் கிடைக்கும் மிகவும் விலை மலிவான பழங்களில் ஒன்று
தான் கொய்யா பழம்.
இதில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன,
மழைக் காலங்களில் எளிதில் நோய்த் தொற்றிவிடும் என்பதால் தினமும் ஒரு கொய்யா
பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இதில் வைட்டமின் பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் தாது உப்புகளும் அடங்கியுள்ளன.
* மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், அப் பிரச்னையில் இருந்து மீளலாம்.
* கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும்.
* இந்த பழம் செரிமான உறுப்புகளை
வலுப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதனை உண்பதால் வயிறு, குடல், இரைப்பை,
கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுப்பெறும்.
* இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
* கொய்யா பழத்தில் உள்ள லைகோபைன் மற்றும் கரோட்டினாய்டுகள் புற்றுநோய் கட்டிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டவை.
* இப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.
* கொய்யா பழத்தை தோல் நீக்கி சாப்பிடுவதை
விட, தோலுடன் அப்படியே சாப்பிட வேண்டும், இது முகத்திற்கு பொலிவை தருவதுடன்
தோல் வறட்சியையும் நீக்கும்.
* இப்பழத்தை இரவில் சாப்பிடக் கூடாது, அதேபோன்று வாதநோய் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடாமல் தவிர்ப்பது நலம்.
-AsM-


0 Comments