Subscribe Us

header ads

முகமது அலி (உலக குத்துச்சண்டை வீரர்) - வரலாற்று நாயகர்!


உலகப் புகழ் பெற்ற குத்து சண்டை வீரர் முகமது அலி
1984 ஆம் ஆண்டு பார்க்கின்சன் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த முகமது அலி அதன் பின்னரும் பல வருடங்களாக சுறுசுறுப்பாகவே இருந்து வந்தார். 1996 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைத்தார்.

2012 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

உலகிலேயே தலை சிறந்த மிகு எடை குத்துச்சண்டை வெற்றி வீரராக கருதப்படும் முகம்மது அலி, 1960ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் மெல்லிய மிகு எடை பிரிவில் முதன்முறையாக தங்கம் வென்ற்றார்.
பின்னர் மூன்று முறை மிகு எடை உலக வெற்றி வீரராக சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்க இராணுவத்தில் சேர மறுத்தமையினாலும் வியட்நாம் யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், அலி கைது செய்யப்பட்டார். அவரது குத்துச்சண்டை பட்டங்களும் பறிக்கப்பட்டன. இதனால் அவர் 4 வருடங்களாக குத்துச்சண்டை போட்டிகளில் விளையாட தடை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.37 முறை நாக்-அவுட் முறையில் வென்றார் என்பது குறிப்பிடதக்கது. நான்காவது முறையாக அந்த விருதை வெல்லும் முயற்சியில் Larry Holmes-யுடன் பொருதி தோற்றார் முகமது அலி. அந்த தோல்விக்கு வயதும் ஒரு காரணம். ஆனால் ஏற்கனவே அவருக்கு கிடைத்திருந்த பெயருக்கும், புகழுக்கும் இந்த தோல்வியால் பாதிப்பில்லை. உலகம் முழுவதும் குத்துச் சண்டையைப் பிரபலபடுத்தியதில் முகமது அலிக்கு பெரும் பங்கு உண்டு. அவரைப் பின்பற்றி இப்போது அவரது மகள் லைலா அலி பெண்கள் குத்துச் சண்டை உலகில் கலக்குகிறார். முகமது அலியை மையமாக வைத்து 'The Greatest' என்ற திரைப்படமும் வெளியானது.
தமது பலத்தால் பலரை வீழ்த்திய முகமது அலியை Parkinson's நோய் வீழ்த்தியிருப்பது என்னவோ உண்மைதான். குத்துச் சண்டைகளின்
போது அவருக்கு தலையில் விழுந்த குத்துகளால்தான்

-Moulavi Malhar Mohamed- 

Post a Comment

0 Comments