Subscribe Us

header ads

மஹிந்த போட்டியிட முடியுமா? சர்வதேச நிபுணரிடம் விளக்கம்


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாக போட்டியிட முடியுமா முடியாதா என்பது குறித்து சர்வதேச நிபுணர்களிடம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விளக்கம் கோரியுள்ளது.
18ம் திருத்தச் சட்டத்திற்கு அமைய அவரால் மீளவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் சட்ட பீட பேராசிரியராக கடமையாற்றி வரும் பேராசிரியர் ஒருவரிடமே இவ்வாறு விளக்கம் கோரப்பட்டுள்ளது.

குறித்த பேராசிரியரின் விளக்கம் இந்த மாதம் 18ம் திகதி சட்டத்தரணிகள் சங்க கேட்போர் கூடத்தில் வெளிப்படுத்தப்படும் என சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக கடமையாற்றி வரும் பேராசிரியர் சூரி ரத்னபாலவிடம் இந்த விளக்கம் கோரப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு தொடர்பில் நிபுணத்துவ அறிவுடைய பேராசிரியர் அரசியலமைப்பு தொடர்பில் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments