Subscribe Us

header ads

சென்னையில் தரை இறங்கிய போது கொழும்பு விமானத்தில் எந்திர கோளாறு: 122 பயணிகள் உயிர் தப்பினர்

கொழும்பில் இருந்து சென்னைக்கு 122 பயணிகளுடன் ‘ஏர்லங்கா’ விமானம் புறப்பட்டு வந்தது.

இந்த விமானம் இன்று காலை 9.30 மணியளவில் சென்னையில் தரை இறக்கப்பட்டது. விமானத்தை ஓடு பாதையில் நிலை நிறுத்தி கொண்டு வந்த போது விமானத்தில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது தெரிந்தது.

இதையடுத்து விமானத்தை சாமர்த்தியமாக விமானிகள் தரை இறக்கி பாதுகாப்பாக பயணிகளை கீழே இறக்கினர்.

சரியான நேரத்தில் தொழில் நுட்ப கோளாறை விமானிகள் கண்டு பிடித்து இறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 122 பயணிகளும் உயிர் தப்பினர்.

அந்த விமானம் மீண்டும் பகல் 12 மணிக்கு கொழும்பு புறப்பட்டு செல்ல வேண்டும்.
எந்திர கோளாறு காரணமாக விமானத்தை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.

இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக காத்திருந்த 130 பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். அவர்கள் அங்குள்ள ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments