ஸ்டைலாக ஆடைகளை அணிவதென்றால் யாருக்கு தான் விருப்பம் இருக்காது. ஓவ்வொருவரும்ஒவ்வொரு விதமான ஆடைகளை அணிவோம்.
இது தான் ஸ்டைல் என்று என்று ஏதும்வரைவிலக்கணம் இருக்கிறதா என்ன? ஆனாலும் ஆடைகள் அணியும் போது சில பொதுவான விதிகளை கடைப்பிடித்தால் இன்னும் ஸ்டைலாகவும் ஸ்மார்ட் ஆகவும் இருக்கும்.
ஆண்கள் சேர்ட் அணிவது ஒரு சாதாரண விடயம். சேர்ட் அணிவதிலும் சில விதி முறைகள்இருக்கின்றன என்பது எங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
ஆண்களில் பலர் நீளக்கை ஷேர்ட் அணிகிறோம். இந்த நீளக்கை ஷேர்ட்டின் கைகள்அதிக நீளமானதாகவோ கட்டையானதாகவோ இருக்கக் கூடாது. மணிக்கட்டுக்குச் சற்றுகீழே இருக்கக் கூடியவாறு உங்கள் ஷேர்ட்டின் கைகள் இருக்க வேண்டும். கைகளைமடக்கும் போதும் கூட ஷேர்ட்டின் கைகள் மணிக்கட்டிற்கு மேலே செல்லாதளவு இருக்க வேண்டும்.
மணிக்கட்டுக்கு கீழே நீண்டிருக்கும் அளவிற்கு நீளக்கை ஷேர்ட் அணிந்தால் ஷேர்ட்எங்கள் உடலில் தொங்கிக் கொண்டிருப்பது போல் பார்க்க அசிங்கமாக இருக்கும். ஸ்மாட்டாகவும் இருக்காது.
நீளக்கை டேடிற்கு மேல் கோர்ட் அணிவோமாயின் கோர்ட்டின் கைக்குக் கீழால்ஷேர்ட் தெரியும் வகையில் இருக்க வேண்டும். இதற்கு கோர்ட மணிக்கட்டுடன் இருக்கும் வகையில் அமைய வேண்டும்.
கழுத்துப்பட்டி அணிவதாயின் ஷேர்ட்டின் “கொலர்” மேலே தூக்கியதாக அமையக் கூடாது. ஷேர்ட்டுடன் நெருங்கியதாக காணப்பட வேண்டும்.
அடுத்த முறை இந்த விதி முறைகளைப் பின்பற்றி ஷேர்ட், கோர்ட் அணிந்துபாருங்கள், வித்தியாசத்தை உணருவீர்கள்.
டெனிம் ஜீன்ஸ்
ஆண்கள் கூடுதலாக டெனிம் ஜீன்ஸ் விரும்பி அணிவோம். ஓவ்வொருவரும் எமக்குப்
பிடித்தமான நிறத்தில் பிடித்தமான விதத்தில் இதை வாங்கி அணிவதுண்டு. ஆனால்டெனிம் ஜீன்ஸை தெரிவு செய்யும் போதும் அதற்கேயுரிய சில விதி முறைகளை
பின்பற்றி வாங்கி அணிவோமானால் எடுப்பாக இருக்கும்.
இங்கே சில டெனிம் ஜீன்ஸ் வகைகளும் அவற்றைப் பொதுவாக அணியக் கூடிய தேவைகளையும்
தருகிறோம், பின்பற்றிப் பாருங்கள்.
-
இடங்களிற்கும் அணியக் கூடியதான, கடுமையான வேலைகளின் போது அணியக் கூடியது. பொருத்தமான ரீஷேர்ட்டுடன் அணிந்தால் எடுப்பாக இருக்கும்.
- மெல்லிய ஃபேடட்(Faded)டெனிம் ஜீன்ஸ் – சாதாரணமாக ஒரு இடத்திற்கு அணிந்து செல்வதற்குமிகவும் பொருத்தமானது. ஷேர்ட் அல்லது ரீ- ஷேர்ட் இதற்குப் பொருத்தமானதாக இருக்கும்.
- டேர்ட்டி டெனிம்(Dirty Denim) – வெளுறிய நிறத்திலான டெனிமாக இது இருக்கும். இளைஞர்கள்சாதாரணமாக அணியக் கூடியது. விஷேட நிகழ்வுகளுக்கு இது அதிகம் பொருத்தமற்றது
கறுப்பு மற்றும் வெள்ளை நிற டெனிம்கள் பொதுவாக நமது நாட்டிற்கு பொருத்தமற்றவை என்கிறார்கள் ஆடை வடிவமைப்பாளர்கள்.
/JAH
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

0 Comments