Subscribe Us

header ads

அடுத்த பிரதமர் மைத்திரிபால?


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என, அரசியர் நிபுணர்கள், அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. 

பிரதமர் பதவியை, மிகவும் பொறுப்பு வாய்ந்த மற்றும் செயற்திறன் மிக்கதொரு அமைச்சர் பொறுப்பேற்பதானது, தேர்தல் காலத்துக்கு மிகவும் அவசியமானது எனவும் அந்நிபுணர்கள் சுட்;டிக்காட்டியுள்ளனர். 

இதன்பிரகாரம், நாட்;டின் அடுத்த பிரதமராக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்படலாம் என்றும் அவரின் பெயர் அப்பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தற்போதைய பிரதமர் தி.மு.ஜயரத்னவின் பிரதமர் பதவியைப் பறித்து, அவரது மகன் அநுராத ஜயரத்னவுக்கு அரசாங்கத்தின் முக்கிய பதவியொன்றை வழங்குமாறும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர்கள் மற்றும் தனியார்த்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கிடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சந்திப்பு, இன்று மாலை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Post a Comment

0 Comments