ஆனந்த தேசிய பாடசாலை அதிபரை வெளியேற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிக்கும் திட்டத்திற்கு எதிராக பாடசாலையின் ஆசிரியர் குழாம் மற்றும் மாணவர்கள் இன்று (27) பாடசாலை முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். அதன் போது அதிபர் மாற்றத்தை ஆதரிப்பவர்களும் இவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தினர்.
அவர்கள் இரு சாராரும் எதிரெதிரே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த எல்லா எதிர்ப்புகளும் பாடசாலை வலாகத்திலேயே நடைபெற்றது. இந்த எதிர்ப ஆர்ப்பாட்டங்களை சுமுக நிலைக்கு கொண்டு வந்து பிரச்சினையை சுமுகமாக தீர்க்க சிலாபம் மாநகர சபையின் தலைவர் சட்டத் தரணி ஹிலரி பிரசன்ன பிரனாந்து கடுமையாக முயற்சித்து பயனளிக்கவில்லை.
இதன் போது பாடசாலை மாணவர்களின் பெற்றோர் சிலர் பாடசாலையின் வாயிலில் நின்றவாறு இந்த அதிபர் பிரச்சினையில் ஆசிரியர் குழாம் இரண்டாக பிரிந்துள்ளனர். இப்பிரச்சினைக்கு முடிவு காண புதிய அதிபர் ஒருவரை நியமிப்பதே சிறந்த தீர்வாகு என குறிப்பிட்டனர்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் .https://www.facebook.com/kalpitiyavoice




0 Comments