பி. முஹாஜிரீன்-
தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபகர் தினம் வியாழக்கிழமை (23) பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சரும்
தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபகருமான மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம்.
அஸ்ரபின் ஞாபகார்த்த தினம் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.
முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம
அதியாகவும் பிரதம பேச்சாளராகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்
ஸ்தாபக செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர் கலந்து
கொண்டதுடன் பல்கலைக்கழகப் பதிவாளர் எச். அப்துல் சத்தார், பிரதிப்
பதிவாளர் மன்சூர் ஏ காதிர் உட்பட பல்கலைக்கழக உயரதிகாரிகளும்
விரிவுரையாளர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது
பல்கலைக்கழக வளாகத்தில் ஸ்தாபகர் ஞாபகார்த்தமாக மர நடுகை நிகழ்வும்
இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபகரான மர்ஹூம் கலாநிதி
எம்.எச்.எம். அஸ்ரபின் ஞாபகார்த்தமாக வருடாந்தம் இப்பல்கலைக் கழகத்தில்
ஸ்தாபகர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

0 Comments