கனடாவில் கண்டுபிடிக்கபட்ட எபோலோ தடுப்பூசி அமெரிக்காவில் எபோலாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
மேற்கு
ஆப்ரிக்க நாடுகளில் எபோலா நோயினால் இதுவரை 4033 பேர் பலியாகியுள்ளதாகவும்,
7 நாடுகளை சேர்ந்த 8,399 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட நாடுகளாக கினியா, லைபிரியா, சீராலியோன் உள்ளிட்ட
நாடுகளும் இரண்டாவது பிரிவில் குறைந்த அளவு பாதிக்கப்பட்ட நாடுகளான
நைஜீரியா, செனாகால், ஸ்பெயின், மற்றும் அமெரிக்கா அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளுக்கும் நோய் பரவி விடும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது இதனால் ஓவ்வொரு நாடுகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளன.
இந்நிலையில் கனடாவில் எபோலா கொடூர நோய்க்கான சோதனை தடுப்பூசி சமீபத்தில் கண்டுபிடிக்கபட்டு உள்ளது.
இதை விலங்குகள் மீது சோதனை செய்து பார்த்த போது இது 100 சதவீதம் எபோலா
நோய் பரவாமல் தடுத்துள்ளது என்பது உறுதி என சுகாதாரதுறை மைச்சர் ரோனா
ஆம்ரோஸ் கூறினார்.
தற்போது அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்கள் மீது தொடங்கியுள்ள இந்த
தடுப்பூசி சோதனை ஆரோக்கியமான நபர் மீது சோதனை நடத்தப்படும் என்றும் இது
எவ்வாறு வேலை செய்கிறது. பக்கவிளைவுகள் உள்ளனவா, எந்த அளவில் மருந்து
கொடுக்கபடவேண்டும் என ஆராய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அந்த தடுப்பூசி நன்கு பயன்யளிப்பதாக அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.




0 Comments