சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஒலுவில் அல் - ஹம்றா மகா
வித்தியாலயத்தில் 1991 ஆம் ஆண்டின் கல்வி பொது தராதர சாதாரண பழைய மாணவர்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் கௌரவிப்பு வைபவம் நேற்று (08)புதன் கிழமை ஒலுவில் அல் - ஹம்றா மகா வித்தியாலய அஷ்ரப் ஞாபகார்த்த மண்பத்தில் நடைபெற்றது.
பழைய மாணவர் ஒன்றியத்தின் தலைவர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தற்போது கற்பிக்கின்ற ஆசிரியர்களும், ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் அதிபர்களும் நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இவ் வைபவத்தில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்.அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.இந்நிகழ்வில் 20 இக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
- Muhajireen Buhari-
0 Comments