Subscribe Us

header ads

உயர் இரத்த அழுத்தம்

“சொன்ன சொல் மாறி­விட்­டீர்கள்” என முகத்தில் அறை­யுமாப் போல அவர் குற்றம் சாட்­ட­வில்­லைத்தான்.“நீங்கள் முந்திச் சொன்­னது ஒன்று இன்று சொல்­வது மற்­றொன்று. படிச்ச நீங்­களே இப்­படி மாற்றிப் பேச­லாமா” என்றும் கேட்­க­வில்­லைத்தான். ஆனால் இது நீதி அநீதி, சரி பிழை போன்­றவை சம்­பந்­தப்­பட்ட விடயம் அல்ல. அறி­வியல். அதிலும் முக்­கி­ய­மாக வளர்ந்து வரும் மருத்­துவ அறி­வியல், அது சார்ந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஆதா­ரங்­களை அடிப்­ப­டை­யாக வைத்து, துறை சார்ந்த நிபுணர் குழு­வினர் எட்­டிய முடி­வு­களை ஒட்­டிய விடயம்.
 
வீட்டில் இலக்­ரோனிக் கரு­வியில் பார்த்­த­போது பிரஷர் சற்று அதிகம் என்­பதால் பதற்­றத்­துடன் என்­னிடம் வந்­தி­ருந்தார். நான் பார்த்­த­போதும் கிட்­டத்­தட்ட அதே அள­வுதான் 148/90 இருந்­தது.
“பர­வா­யில்லை உங்­கடை வய­திற்கு அவ்­வ­ளவு இருக்­கலாம்” என்று சொன்­னதின் பிர­தி­ப­லிப்பு இது. அவ­ரது வயது 63 ஆகும்.
 
அவர் பயப்­பட்­ட­திலும் நியாயம் இருக்­கவே செய்­கி­றது. நாம் மருத்­துவத் தொழில் ஆரம்­பித்த காலங்­களில் வய­துடன் 100க் கூட்­டினால் வரும் எண்­ணிக்­கையின் அள­விற்கு இரத்த அழுத்தம் இருக்­கலாம் என்றோம். பின்னர் எந்த வய­தா­னாலும் 130/90 யைத் தாண்டக் கூடாது என்ற வரை­யறை வந்­தது. இதையே அவர் ஞாப­கத்தில் வைத்­தி­ருந்தார்.
 
இப்­பொ­ழுது புதி­தான வழி­காட்டல் 60 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு 150/90 இருக்­கலாம் என்­கி­றது.
 
உண்­மைதான் மருத்­துவ அறி­வியல் கருத்­துக்கள் கால ஓட்­டத்தில் மாறு­கின்­றன. புதிய ஆய்வு முடி­வு­க­ளுக்கு ஏற்ப நோயா­ளி­க­ளுக்கு அதிக நன்மை அளிக்­கு­மாறு சிகிச்சை முறைகள் மாற­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது.
 
பிரஸர் பற்­றிய Eighth Joint National Committee (JNC 8)யின் புதிய வழி­காட்­டல்கள் என்ன கூறு­கின்­றன?
 
அறு­பது வய­திற்கு மேற்­பட்­ட­வர்­க­ளது பிரஷர் ஆனது 150/90 மேல் இருந்தால் மட்­டுமே சிகிச்­சையை ஆரம்­பிக்க வேண்டும். அதா­வது மேலே உள்ள சுருக்­க­ழுத்தம் (Systolic blood pressure - SBP) 150ற்கு மேல் இருந்தால் அல்­லது கீழே உள்ள விரி­வ­ழுத்தம் ((Diastolic blood pressure - DBP ) 90 ற்குக் மேல் இருந்தால் மட்­டுமே சிகிச்சை அளிக்­கப்­பட வேண்டும்.
 
சரி புதி­தாகச் சிகிச்சை அளிக்­கும்­போது பிரஸர் குறைந்தால் அல்­லது ஏற்­க­னவே அவர்­க­ளது பிரஸ­ரா­னது சிகிச்சை கார­ண­மாக 140/90 ற்கு கீழ் குறைந்­தி­ருந்தால் மருந்தின் அளவைக் குறைக்க வேண்­டுமா என்ற கேள்வி எழு­கி­றது. இல்லை உட்­கொள்ளும் மருந்தின் அள­வா­னது அவர்­க­ளுக்கு எந்­த­வி­த­மான பாத­க­மான பக்க விளை­வு­க­ளையும் ஏற்­ப­டுத்­தாது ஒத்­துக்­கொள்ளும் வித­மாக இருந்தால் மருந்தின் அளவைக் குறைக்க வேண்­டி­ய­தில்லை.
 
அதே­நேரம் அறு­பது வய­திற்கு கீழ்ப்­பட்­ட­வர்­களைப் பொறுத்­த­வ­ரையில் அவர்­க­ளது விரி­வ­ழுத்தம் ஆனது 90 ற்கு மேல் இருந்தால் சிகிச்­சையை ஆரம்­பிக்க வேண்டும். சிகிச்சை மூலம் இதை 90 அல்­லது 90ற்குக் கீழ் கொண்டு வரு­வது அவ­சி­ய­மாகும்.
 
அதே போல அறு­பது வய­திற்கு கீழ்ப்­பட்­ட­வர்­களின் சுருக்­க­ழுத்­த­மா­னது 140 ற்கு மேல் இருந்தால் சிகிச்­சையை ஆரம்­பித்து அதனை 140 அல்­லது அதற்குக் கீழ் குறைக்க வேண்டும்.
நீரி­ழிவு மற்றும் நாட்­பட்ட சிறு­நீ­ரக நோயா­ளர்­களில் 18 வய­திற்கு மேற்­பட்ட நீரி­ழிவு நோயுள்­ள­வர்­க­ளுக்கும் நாட்­பட்ட சிறு­நீ­ரக நோயா­ளர்­க­ளுக்கும் இதே 140/90 ற்கு மேல் இருந்தால் பிர­ஸ­ருக்­கான சிகிச்சை அவ­சி­ய­மாகும்.
 
நீரி­ழிவு நோய் உள்­ள­வர்­களைப் பொறுத்த வரையில் அவர்கள் 18 வய­திற்கு மேல் எந்த வய­தா­ன­வ­ராக இருந்­தாலும் அவர்­க­ளது இரத்த அழுத்­த­மா­னது 140/90 ற்கு மேல் இருந்தால் சிகிச்சை ஆரம்­பிக்­கப்­பட வேண்டும். சுருக்­க­ழுத்­த­மா­னது 140 அல்­லது அதற்குக் கீழும் விரி­வ­ழுத்­த­மா­னது 90 அல்­லது அதற்குக் கீழ் குறை­யு­மாறு சிகிச்சை அளிக்­கப்­பட வேண்டும். நாட்­பட்ட சிறு­நீ­ரக நோயுள்­ள­வர்­க­ளுக்கும் நீரி­ழிவு உள்­ள­வர்­க­ளது அள­வு­களே பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கி­றது.
 
இது வரை காலமும் நீரி­ழிவு உள்­ள­வர்­க­ளது பிர­ஸரை 130/80 ற்கு குறைக்க வேண்டும் என்றே பெரும்­பாலும் சிபாரிசு செய்­யப்­பட்­டது. ஆனால் அந்த அள­விற்கு குறைப்­ப­தால், பக்­க­வாதம், இரு­தய நோய்கள், மார­டைப்பு, சிறு­நீ­ரக நோய்கள் போன்­றவை ஏற்­ப­டாமல் தடுப்­பதில் குறிப்­பி­டத்­தக்க நன்­மைகள் எதுவும் கிடைத்­த­தாக ஆய்­வுகள் உறு­திப்­ப­டுத்­தாத கார­ணத்­தால்தான் நீரி­ழிவு உள்­ள­வர்­க­ளுக்கும் அதே 140/90இல் கட்­டுப்­ப­டுத்­து­வது போது­மா­னது என்று சொல்­கி­றார்கள்.
 
சிகிச்சை முறை
 
நான்கு வகை­யான மருந்­துகள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளன (thiazide-type diuretic, CCB, ACEI, or ARB) இவற்றில் கறுப்பின மக்­க­ளுக்கு முதல் இரண்டில் ஒன்றை ஆரம்ப நிலையில் உப­யோ­கிக்கச் சிபாரிசு செய்­தி­ருக்­கி­றார்கள்.
 
முதல் முத­லாக ஒரு­வ­ருக்கு பிரஸர் உள்­ளது என கண்­ட­றி­யப்­பட்­டதும் மருத்­துவர் மேற் கூறி­ய­வற்றில் ஏதா­வது ஒரு பொருத்­த­மான மருந்தை சிபாரிசு செய்வார். அதை உப­யோ­கித்து வரு­கையில் ஒரு மாதத்தின் பின்னர் பிர­ஸரை மீண்டும் அள­விட்டு மருத்தின் அளவை மறு பரி­சீ­லனை செய்­வார்கள். பிர­ஸ­ரா­னது சொல்­லப்­பட்ட அள­விற்கு அல்­லது அத­னிலும் சற்று அதி­க­மாகக் குறைந்­தி­ருந்தால் அதே அளவில் தொடர வேண்டும். மருந்தின் அளவைக் குறைக்கக் கூடாது.
 
ஆனால் பிர­ஸரின் அள­வா­னது விரும்­பப்­பட்ட அள­விற்கு ஒரு மாதத்தில் குறை­ய­வில்லை எனில் மருத்­துவர் ஏற்­க­னவே கொடுத்த மருந்தின் அளவை அதி­க­ரிப்பார் அல்­லது இரண்­டா­வ­தாக மற்­றொரு மருந்தைச் சேர்த்தும் தரக் கூடும்.
 
பிரஸ­ரா­னது விரும்­பிய அளவை எட்டும் வரை மருத்­துவர் தொடர்ச்­சி­யான கண்­கா­ணிப்பை வைத்­தி­ருப்பார். இரண்டு வகை­யான மருந்­து­களைக் கொடுத்தும் பிரஸர் குறை­ய­வில்லை எனில் மூன்­றா­வது மருந்­தையும் சேர்த்து உப­யோ­கிக்­கவும் நேரலாம்.
 
இதனை உங்கள் அருகில் உள்ள அரச மருத்­துவர் அல்­லது குடும்ப மருத்­துவர் கண்­கா­ணித்து மருத்­துவம் செய்வார். மூன்று மருந்­து­க­ளாலும் பிர­ஸரைக் கட்­டுப்­பாட்டில் கொண்­டு­வர முடி­யாது போனால் மாத்­திரம் ஒரு விசேட மருத்­து­வரை அணு­கு­வது உசி­த­மா­னது என சிபாரிசு செய்­கி­றார்கள்.
 
சாதா­ரண இரத்த அழுத்­தத்தை 120/80 என்­பார்கள். இது 140/90 ற்கு மேலே சென்­றால்தான் அதை உயர் இரத்த அழுத்தம் என்­கிறோம்.
 
இதில் எந்த மாற்­றத்­தையும் புதிய வழி­காட்டல் செய்­ய­வில்லை. வய­தா­ன­வர்கள் மற்றும் நீரி­ழிவு உள்­ள­வர்­களில் இதை எந்த அள­விற்குக் குறைக்க வேண்டும் என்­ப­தையே புதிய வழி­காட்டல் சொல்­கி­றது.
 
மருந்­து­களைப் பற்றிச் சொன்­ன­போதும் பிர­ஸரைக் குறைப்­பதில் வாழ்க்கை முறை மாற்­றங்கள் உதவும் என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. ஆரோக்­கி­ய­மான உணவு முறை, தின­சரி உடற் பயிற்சி, எடையைச் சரி­யான அளவில் பேணுதல் போன்­ற­வற்றை கடைப்­பி­டிப்­பது அவ­சியம் என்­பதை புதிய வழி­காட்­டல்கள் உறு­திப்­ப­டுத்­தவே செய்­கி­ன்றன.
 
எனவே மருந்தைப் போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற மனநிலையை மாற்ற வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பது எப்போதும் அவசியமானதே.
 
இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் பொதுவான உடல்­நலம் மேம்­ப­டு­வது மாத்­தி­ர­மின்றி மருந்­து­களின் அள­வு­க­ளையும் குறைக்க முடியும் என்­பதை நினைவில் வைத்­தி­ருங்கள்.
“மீண்டும் சொன்ன சொல் இன்னும் சில வருடங்களில் மாறலாம்.
 
புதிய புதிய கண்டுபிடிப்புகளின் பயனாக நோயாளிகளுக்கு நன்மை அதிகம் கிடைக்கும் பட்சத்தில்” என விடைபெற்ற அவர் எழுந்தபோது நான் கூறியதை ஆமோதிப்பது போலத் தலையை ஆட்டி மனத் தெளிவோடு அவர் புன்னகைத்தார்.
 
டொக்டர்.எம்.கே.முருகானந்தன். குடும்ப மருத்துவர்

Post a Comment

0 Comments