Subscribe Us

header ads

என் செல்ல மகளே!


ஆனந்த யாழை
அன்புடன் மீட்டுகிறாய்..!
ஆயிரம் சொந்தங்களை
அன்பால் கூட்டுகிறாய்..!

தாயே தெய்வமென
தலைவணங்கும் தேவதையே..!
தந்தைக்கு என்றும்
தனி அன்பு தருபவளே..!

தோட்டத்து ரோஜா பார்க்குதடி
தேவதை உனக்காய் புக்குதடி..!
வானத்து நிலவு பார்க்குதடி
வண்ணமகள் அழகை கூட்டுதடி...!

என் தேவதை நீயடி-உன்
புன்னகை எனக்கு போதுமடி..!
அள்ளி அணைத்தால்
ஆயிரம் துன்பங்கள் ஓடுதடி..!
உன் மொழி எனக்கு போதுமடி
உலகை மறந்து வாழ்வேனடி..!



/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள்  அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு  உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED  யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments