ஊடகம்..
மூச்சு விட்டால்
எழுச்சியும் புரட்சியும்
முகமும் முகவரியுமாக
உருப்பெறும்------
“மீடியா“ – என்ற
சாம்ராஜ்யம்
ஆக்கத்துக்கும்
அழிவுக்கும் ஆத்மாவாக
சத்தியம் செய்யப்பட்டது.
------மூச்சு விட்டால்
எழுச்சியும் புரட்சியும்
முகமும் முகவரியுமாக
உருப்பெறும்------
“மீடியா“ – என்ற
சாம்ராஜ்யம்
ஆக்கத்துக்கும்
அழிவுக்கும் ஆத்மாவாக
சத்தியம் செய்யப்பட்டது.
உலகின்
கண்ணாகவும்
மானிடனின்
கண்ணாடியாகவும்
காற்றுக்கு..
சுவாசம் கொடுக்கும் – இந்த
ஊடகம்
சட்டத்துக்குச் சாட்டையாகவும்
மரணத்தை மறக்க
மாத்திரை கேட்கும்
அரசியல்வாதிகள் – என்ற
முனிவர்களுக்கு
தீக்குச்சியாய்
விடையளிக்கும்.-----
உலகை வடிவமைக்கும்
ஊடக சிந்தாந்தத்துக்கு
சிதையுண்ட,
சிதையிலிருக்கும் – மனித
சதைகள்
கைகொடுத்து மகிழும்.-----
விமர்சனமும்
விருதுகளும் சுரண்டப்படும்
இடமல்ல – இந்த
ஊடகம்.
இதன் பார்வைக்கு
தேசியக் கொடி கூட
தலை வணங்கும்-----
ஜனநாயகத்தை
திண்ணும்
மதவாதத்துக்கும்
சாம்பலாக்கப்படும்
சட்ட நியாயத்துக்கும்
இந்தப் பேனா என்ற
சுதந்திரச் சுடர்
சாகா வரம்பெற்றது.-----
கருத்துப் பரிமாற்றத்துக்கு
கழுத்தில் கத்தியும்
மூளையின் செலவுக்கு
பின்னால்
முள்ளந் தண்டில்
துப்பாக்கி தலைமைகளும்
நிழல்களாகப்
பாதை அமைத்தாலும்
சுதந்திரக் குரலுக்காக
இதயத்தையே
பிடிங்கி எறியும் – இந்த“ மீடியா”
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments