Subscribe Us

கொம்பனித்தெருவில், ரவி கருணாநாயக்க மீது தாக்குதல்.


கொழும்பு – கொம்பனித்தெருவில் உள்ள இலங்கை துறைமுக அதிகார சபையின் பயிற்சி கல்லூரியை பார்வையிடச் சென்ற தான் உள்ளிட்ட உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அந்தக் கல்லூரியில் நடைபெறும் ஊழல் மோசடி குறித்து ஆராய பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி.பெரேரா, ஆர்.யோகராஜன், நலின் பண்டார ஆகியோருடன் தானும் சென்றிருந்ததாக ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

தாக்குதலில் வாகனங்களுக்கும் ஊடகவியலாளர்கள் இருவரின் கமராக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த இடத்தில் இலக்கத் தகடு இல்லாத வாகனம், அரசாங்க அமைச்சர்களின் போஸ்டர் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக வந்த தகவலை அடுத்து ஆராயச் சென்றதாக ரவி கருணாநாயக்க கூறினார்.


அதன்போது கல்லூரி பகுதியில் இருந்த நபர்கள் தங்களுக்கு இடையூறு ஏற்படுத்தி தாக்குதல் நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments