Subscribe Us

header ads

மகன் அரசியலுக்கு வருவான்: மேர்வின்



எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் மூலம் எனது மகன் மாலக நிச்சயமாக அரசியலுக்கு வருவான், என்று பொது உறவுகள் மற்றும் பொது விவகார அமைச்சர் மேவின் சில்வா இன்று தெரிவித்தார்.

கடந்த தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா? மற்றும் எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாரா? என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தனக்கு இன்னும் சிறிய வேலைகள் நிறைவு செய்யவேண்டியுள்ளன. இதற்கு அரசாங்கம் ஆதரவு வழங்காதுவிடின், அரசாங்கத்திலிருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்தார்.

'வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக நான் பொய்யான வாக்குறுதிகளை வழங்கமாட்டேன். பொய்யான வாக்குறுதிகளை வழங்கிவிட்டு நாடாளுமன்றத்துக்கு செல்லமாட்டேன்' என்று அவர் மேலும் தெரிவித்தார்

Post a Comment

0 Comments