Subscribe Us

header ads

கற்பிட்டி சனூன் அவர்களின் கொடூர கொலையில் தொடர்புடையவருக்கு 20 வருடங்களின் பின் தூக்கு தண்டனை.........



                        ம்ஹும் சனூன் அவர்கள்

1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கற்பிட்டி காவற்துறையில் சனூன் அவர்களை தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த முன்னாள் உப காவற்துறை பரிசோதகருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை புத்தளம் மேல்நீதிமன்ற நீதிபதி ப்ரியன்த பெர்ணாண்டோ முன்னிலையில் நேற்று 03.10.2014 இடம் பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கற்பிட்டியை சேர்ந்த 31 வயதுடைய சனூன் அவர்களை காவற்துறை நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் உப காவற்துறை பரிசோதகர் உள்ளிட்ட 5 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஏனைய நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

சனூன் அவர்கள் சஜான் அவர்களின் தந்தையும் மஹீன் அவர்களின மாமாமனாரும் ஆவார். 

Post a Comment

0 Comments