இன்று முற்பகல் 11 மணி தொடக்கம் கற்பிட்டி நகர பௌத்த விகாரை முன்னிலையில் (நேவிக்கு அருகில்) விகாரையின் பிக்குகள் உட்பட பிரதேசவாசிகள் சிலர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர்.
கற்பிட்டி பௌத்த விகாரைக்கு அருகாமையில் நிர்மானிக்கப்பட இருக்கும் கற்பிட்டி பிரதேச சபையின் புதிய கட்டிடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இங்கு கருத்து தெரிவித்த கற்பிட்டி பௌத்த விகாரையின் விகாராதிபதி; தங்களுடைய விகாரையினதும் , பௌத்த பிக்குகளினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதி ஆரம்பத்திலேயே இந்த நிர்மான வேலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தங்களது கோரிக்கைக்கு மாறாக இந்த வேளையை செயற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

இவர்களது உண்ணா விரத போராட்டத்தை தொடர்ந்து அங்கு வருகை தந்த கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான ஜூட் மற்றும் தாரிக்; பௌத்த பிக்குகளின் கோரிக்கைக்கு உடன் பட்டு அவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதமும் அளிக்கப்பட்டது அதன் பிற்பாடாக உண்ணாவிரதம் கைவிடப்பட்டள்ளது என எமது கற்பிட்டியின் குரல் செய்தி நிருபர் தெரிவித்தார்.
படங்கள் உதவி : Prakash Lanka Fashion
/ASM

0 Comments