Subscribe Us

header ads

பாகிஸ்தான் கிரிக்கெட் T20 அணியின் தலைவராகிறார் சஹிட் அப்ரிடி.


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இருபதுக்கு-20 போட்டிகளுக்கான தலைவராக சஹிட் அப்ரிடி பெயரிடப்பட்டுள்ளார்.

எதிர்வரும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய தொடர்களில் அப்ரிடி தலைவராக செயற்படவுள்ளார்.

கடந்த ஏப்ரல மாதம் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 போட்டிகளிலில் பாகிஸ்தான் அணி சோபிக்க தவறியநிலையில் எழுந்த விமர்சனங்களையடுத்து  அப்போதைய தலைவராக செயற்பட்ட மொஹமட் ஹபீஸ் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

 எதிர்வரும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய தொடர்களில் ஒரு நாள் தொடரில் மிஷ்பா தலைமையில் திருப்தி அடையாவிட்டால் உலக கிண்ண தொடருக்கு முன் மிஷ்பாவும் பதவி இழக்கக்கூடும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரம் தெரிவிக்கிறது.

சஹிட் அப்ரிடி பாகிஸ்தான் சார்பில் பத்தொன்பது இருபதுக்கு-20 சர்வதேச போட்டிகளில் தலைவராக செயற்பட்டு  எட்டு வெற்றி பதினொன்று போட்டிகளில் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

source: http://www.dawn.com/news/1132236/shahid-afridi-all-set-to-be-named-twenty20-captain

-AsM-

Post a Comment

0 Comments