Subscribe Us

header ads

இலங்கையிலும் ISIS! அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கண்டுபிப்பு!!

GTN
இலங்கையிலும் தனது பிரச்சாரத்தை விஸ்தரிக்க ஐ.எஸ் .ஐஎஸ்; அமைப்பு தீர்மானித்துள்ளது. அதனை கட்டுப்படுத்தாவிட்டால் இன்னொரு உலக யுத்தம் மூளும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட குழுவினர் இந்தியா,இலங்கை போன்ற நாடுகளில் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளதுடன் மாத்திரமில்லாமல் இணையத்தை பயன்படுத்தியும் ஆட்களை சேர்க்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமைப்பு 24 நாட்களுக்குள் ஈராக்கில் பெருமளவு நிலங்களை கைப்பற்றியுள்ளது, நவீன ஆயுதங்களையும் விமானங்களையும் கொண்டுள்ள அந்த அமைப்பு உலகின் பல நாடுகளுக்கு ஆபத்தானதாக காணப்படுகிறது, இதனை கட்டுப்படுத்தாவிட்டால் இன்னமும் ஆபத்தானதாக மாறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments