கடவுள் நம்பிக்கை என்பது அழிந்து போய்விட்டது என்று பலர் நினைத்தாலும் அது அழியவில்லை என்பதை நிரூபிப்பதற்கு சில சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.
அந்தவகையில் இந்தியாவின் தமிழ்நாட்டில் கொளத்தூர் எனும் பிரதேசத்தில் பசுவொன்று, நெற்றிக்கண்ணுடன் கூடிய கன்று ஒன்றை ஈன்றுள்ளது. அதாவது இக்கன்றுக்குட்டிக்கு மூன்று கண்கள் காணப்படுகின்றதாம்.
இதனை அங்குள்ள மக்கள் ஹிந்துக்களின் முழு முதல் கடவுளான சிவபெருமானின் அவதாரம் என்று நம்பி, இக்கன்று குட்டியை வணங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்கன்று குட்டியை காண்பதற்கும் வணங்குவதற்குமென அங்குள்ள பிரதேச மக்கள் மாத்திரமின்றி அயல் பிரதேசங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு சென்று பார்வையிட்டு வணங்கி வருகின்றனராம்.
இக்கன்றுக்குட்டியின் உரிமையாளராக ராஜேஷ் என்பவர், இது என்னுடைய வீட்டில் பிறந்தது இக்கிராமத்துக்கே ஓர் அதிர்ஷ்டம் என்றும் அதிசயிக்கத்தக்க விடயம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாம் இதனை தொடர்ந்து வழிபாடு செய்து வந்தால் எனக்கும் என்னை சுற்றியுள்ளோருக்கும் நன்மை பயக்கும் என்று நம்புகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
சிவபெருமான், ஹிந்துக்களின் முழு முதற் கடவுளாவார். அவருக்கு முக்கண் உள்ளன. தற்போது எமது கிராமத்தில் பிறந்துள்ள கன்றுக்குட்டிக்கும் மூன்று கண்கள் உள்ளன.
சிவனுக்கு கோபம் அதிகரித்து ஆக்ரோஷமடைந்தால் அந்த கோபத்துக்கு காரணமாக இருப்பவர்களை எரித்து சாம்பராக்குவதற்காகவே அவருடைய நெற்றிக்கண்ணை திறப்பார் என்பது நம்பிக்கை.
அதேபோல் இக்கன்றுக்குட்டி, ஏன் எங்கள் கிராமத்தில் பிறந்தது என்று எங்களுக்கு தெரியாது. ஆனாலும் இதனை சிவபெருமானது அவதாரம் என்று எண்ணி நாம் வணங்கி வருகின்றோம் என்று அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்ணெருவர் தெரிவித்துள்ளார்.
நன்றி: tamil mirror
-AsM-

.jpg)
0 Comments