
தேசிய தேர்தல் தொடர்பில் ஐ.தே.கட்சியின் செயற்குழுவின் தீர்மானங்கள் தொடர்பில் வினவிய போதே அவர் கேசரிக்கு இத்தகவலை வழங்கினார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு விசேட ஏற்பாடுகளை ஐ.தே.க முன்னெடுக்கவுள்ளது. கட்சியின் நிர்வாக பதவிகளுக்கு புதிய முகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றியினை இலக்கு வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். மேலும், தேசிய கட்சிகளுடனும் பேசவுள்ளோம்.
அத்தோடு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் செயற்குழு ஆராயப்படவில்லை. மாறாக ஐ.தே.கட்சி யின் ஒருவரை வேட்பாளராக களமிறக்கவுள்ளோம். இதற்கமைய எமது கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே களமிறக்கவுள்ளோம்.
மேற்படி, அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஐ.தே.க. வின் செயற்குழுக்கூட்டத்தில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையின் கீழ் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸ, தலைமைத்துவ சபை தலைவர் கரு ஜெயசூரிய, உபதலைவர் ரவி கருணாநாயக்க, பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட கட்சியின் உயர் பதவி வகிப்போர் தலைமைத்துவசபை உறுப்பினர்கள் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.
இதனூடாக கிராம மட்டத்திலான கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதோடு கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை இணைப்பதற்கான முயற்சிகளும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.
எனவே, ஜனாதிபதி தேர்தலில் பலமான கட்சியாக ஐ.தே.க. களமிறங்கும் என்றார்.
நன்றி : மடவலை நிவ்ஸ்
/JAH
0 Comments