Subscribe Us

header ads

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: மதியம் 1 மணிக்கு தீர்ப்பு?


ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கின் தீர்ப்பையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதா பெங்களூரு சென்றார். காலை 8.45 மணி அளவில் சென்னை போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்ட அவர், விமானம் மூலம் பெங்களூரூ சென்றார்.

ஜெயலலிதாவின் வருகையையொட்டி பரப்பன அக்ரஹார வளாகத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.தீர்ப்பு வழங்கப்படும் பரப்பன அக்ரஹார வளாகம் மற்றும் தமிழக - கர்நாடக எல்லையில் சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

1991 முதல் 1996 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது.

144 தடை உத்தரவு

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவிருப்பதை முன்னிட்டு, பரப்பன அக்ரஹார பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று இரவு முதல் 48 மணி நேரத்திற்கு அமலில் இருக்கும் என பெங்களூரு மாநகர காவல் ஆணையர் ரெட்டி தெரிவித்திருக்கிறார்..

நன்றி : Puthiya Thalai Murai
/JAH

Post a Comment

0 Comments