Subscribe Us

header ads

ஜனாதிபதி மஹிந்தவின் விசேட இணையதளம்


ஐக்கிய நாடுகள் அமைப்புடன் ஜனாதிபதியும் இலங்கையும் கொண்டுள்ள நடவடிக்கைகள், தொடர்பாடல்கள் தொடர்பாகக் கவனஞ்கெலுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விசேட இணையத் தளமொன்றை அங்குரார்ப்பணம் செய்துவைத்துள்ளார். இந்த வாரம் நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள 69ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் தனது பங்குபற்றுதலுக்கு முன்னதாக ஜனாதிபதி இந்த இணையத் தளத்தை அங்குரார்ப்பணம் கெய்துவைத்தார்.
 
பின்வரும் முகவரியினூடா இந்தப் புதிய தளத்தை அணுக முடியும்: http://unga.president.gov.lk
 
1955இல் உறுப்பினரானமையிலிருந்து இலங்கையானது எல்லா ஐக்கிய நாடுகள் முறைமைகளோடும் தொடர்புபட்டு வந்துள்ளதுடன், அதனைத் தொடர்ந்தும் வருகிறது. ஐக்கிய நாடுகளில் ஜனாதிபதியின் பணிகளினதும், பல்வேறு ஐக்கிய நாடுகள் அமைப்புக்களுடன் அரசாங்கத்தின் இணைந்த செயற்பாடுகளினதும் சேமிப்பிடமாக இந்த இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்யப்படுகிறது.
 
69ஆவது ஐ.நா பொதுச்சபையின் செய்திப்பரப்பு

69ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பங்குபற்றுதலுடன் தொடர்பான, நியூயோர்க்கில் இடம்பெறும் ஏனைய உத்தியோகபூர்வ நிகழ்வுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களும் மும்மொழிகளிலும் உரிய காலத்தில் இந்த இணையத்தில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
TamilMIrror

Post a Comment

0 Comments