கொழும்பு துறைமுக நகர (Colombo Port City) அபிவிருத்தித் திட்டம், சீன
ஜனாதிபதி ஷி ஜிங்பிங் மற்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஸ ஆகியோர்
தலைமையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகரை அண்மித்த
கடல் பகுதி நிரப்பட்டு 233 ஏக்கர் காணியில் புதிய நகரம்
நிர்மாணிக்கப்படவுள்ளதாக இலங்கை துறைமுகங்கள் அதிகார சபை
குறிப்பிட்டுள்ளது.
170 ஹெக்டேயர் பகுதி அபிவிருத்தி செய்யப்பட
வேண்டிய பகுதியாக இனங்காணப்பட்டுள்ளதுடன், 63 ஹெக்டேயர் நிலப்பரப்பு பொது
வசதிகளுக்காகவும். எஞ்சிய பகுதி வீதிகள் மற்றும் பூங்காக்களுக்காக
ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக China Communication
Construction நிறுவனம் 1,337 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு
செய்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி: news1st
-AsM-


0 Comments