Subscribe Us

header ads

குறைந்த விலையில் அரிசியை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாந்து உத்தரவு


நிர்ணய விலையை விடவும் குறைந்த விலைக்குத் அரிசியை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்குமாறு கூட்டுறவு, உள்ளூர் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாந்து சதொச தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சந்தையில் அரிசி விலைகள் உயர்வடைந்துள்ள நிலையில் பிரதான நகரங்களிலுள்ள சதொச வர்த்தக நிலையங்களினூடாக நிர்ணய விலையை விட குறைந்த விலைக்கு அரிசி விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி சம்பா 76 ரூபாவுக்கும், வெள்ளை அரிசி 64 ரூபாவுக்கும், வெள்ளை நாட்டரிசி 67 ரூபாவுக்கும் விற்கப்படுகிறது. கடந்த காலத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு அரிசி விலை உயர்வு காரணமாக மக்களுக்கு குறைந்த விலையில் சதொச ஊடாக அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 போகங்களில் எதிர்பார்த்த அறுவடை கிடைக்காததால் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டது. எதிர்வரும் நாட்களில் சந்தைக்கு போதுமான அளவு அரிசி வரும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாந்து தெரிவித்தார்.

Post a Comment

0 Comments