Subscribe Us

header ads

"யாரைதான் நம்புவதோ பேதை நெஞ்சம்" எவரையும் நம்பக்கூடாதாம் - சம்பிக்க

இலங்கையின் நேச நாடான சீனாவையும் நூறு வீதம் நம்ப முடியாது என கைத்தொழில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிடம் நாட்டின் மின் நிலையங்களை ஒப்படைப்பது ஆபத்தானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேச நாடான சீனாவிடம் கூட மின் நிலையங்களை ஒப்படைப்பது பொருத்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு மின் நிலையங்களை ஒப்படைப்பதனால் ஆபத்துக்கள் ஏற்படக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை சீனாவிடம் ஒப்படைப்பது பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மின்வலு எரிசக்தி மாபியாக்கள் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள என அவர் குறிப்பிட்டுள்ளார். சக்தி வளப்பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காண்பதற்கு அமைச்சரவை மாற்றுவதில் பயனில்லை என தெரிவித்துள்ளார்.


நன்றி: globaltamilnews.net
/Az

Post a Comment

0 Comments