Subscribe Us

header ads

குறைக்கப்பட்ட விலைகளுக்கு அமைய எரிபொருட்கள் விநியோகிக்கப்பட வேண்டும் – இ.பெ.கூ


குறைக்கப்பட்ட விலைகளுக்கு அமைவாக அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இன்று முதல் எரிபொருட்கள் விநியோகிக்கப்பட வேண்டும் என இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் அறிவித்துள்ளது.
ஐந்து பிரிவுகளின்கீழ் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுசந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

வீட்டுப் பாவனைக்கான மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 106 ரூபாவில் இருந்து 86 ரூபாவரை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

ஒக்டெய்ன் 92 ரக பெற்றோலின் விலை 162 ரூபாவிலிருந்து 157 ரூபா வரையும், ஒக்டெய்ன் 95 ரக பெற்றோல் 170 ரூபாவிலிருந்து 165 ரூபா வரையும் ஐந்து ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

லங்கா ஒட்டோ டீசல் 121 ரூபாவில் இருந்து 118 ரூபா வரை மூன்று ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, லங்கா சுபர் டீசல் 4 ஸ்டார் 145 ரூபாவில் இருந்து 140 ரூபாவரை ஐந்து ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொடர்ந்தும் கூடுதல் விலைக்கு எரிபொருள் விற்பனை செய்யப்படுகின்ற இடங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பொதுக்களை கேட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளை குறைப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அறிவித்திருந்தார்.

இதற்கமைய மின்சாரக் கட்டணம் 25 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments