இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன
ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவை சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இரு
நாட்டுத் தலைவர்களும் மின் அழுத்தியை இயக்கி நுரைச்சோலை அனல் மின்நிலைய
நினைவுப் படிகத்தை திரைநீக்கம் செய்துவைத்தனர்.
இதன் மூலம் நுரைச்சோலை அனல் மின்நிலைய 2 ஆம் 3 ஆம் கட்டங்கள் திறந்துவைக்கப்பட்டன.
இலங்கையின் நாளாந்த மின்தேவையானது 2015
மெகாவோட்ஸாக இருக்கும் நிலையில், 900 மெகாவோட்ஸ் மின்சாரத்தை தேசிய
கட்டமைப்புடன் இணைப்பதன் ஊடாக தேசிய மின்கட்டமைப்பு 3900 மெகாவோட்ஸாக
அதிகரிக்கிறது.
இதனூடாக நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் தொடர்ச்சியாக தடையின்றி மின்சார வசதி அளிப்பது நூறு வீதம் உறுதிப்படுத்தப்படுகிறது.
நன்றி: News.lk












0 Comments