Subscribe Us

header ads

ஆளும்கட்சிக்கு வாக்குள் குறைவு - உயர் கல்வியமைச்சர் கூறும் விசித்திர காரணம்

 
நிறைவடைந்த ஊவா மாகாண சபை தேர்தலில் பதுளை மாவட்டத்தில் பதுளை, ஹாலிஎலி, வெலிமடை ஆகிய தேர்தல் தொகுதிகளை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றியது.
இதில் விசேட அம்சம் என்னவென்றால் பதுளை தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளராக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா செயற்படுகிறார்.
அது போல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஹாலிஎல தேர்தல் தொகுதி அமைப்பாளராக அமைச்சர் டிலான் பெரேரா செயற்படுகிறார்.
ஊவா மாகாண சபை தேர்தல் நிறைவடைந்த நிலையில், உயர் கல்வி அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க,  ஊடக சந்திப்பொன்றை நடத்தினார்.
இதன்போது அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா மற்றும் அமைச்சர் டிலான் பெரேரா ஆகியோரின் தொகுதிகளில் பெறப்பட்ட தோல்வி குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க இவ்வாறு பதில் வழங்கினார்.


 இதனை அவர்கள் இருவரும் மிக இலகுவில் சீரமைத்து விடுவார்கள் டிலானுக்கும், நிமாலுக்கும் அதனை விரைவில் சீர்செய்துகொள்ள முடியும். அது பெரிய சிரமம் இல்லை. நான் நினைக்கிறேன், அமைச்சர் நிமால் அதிகளவானர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ள நிலையில், அவர்கள் தொகுதிக்கு வெளியில் சென்றுவிட்டனர். தேர்தலுக்கு அவர்கள் வரவில்லை, இது சிறிய தேர்தல்தானே. டிலானும் அதிகளவானவர்களை கொரியாவுக்கு அனுப்பியுள்ளார் அதனால்தான் வாக்கு குறைவடைந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். அதனால் அதனை அவர்கள் சீர்செய்து கொள்வார்கள் அது அவர்களுக்கு பாரிய அழுத்தத்தை கொடுக்காது என்று நான் நினைக்கிறேன்.

Post a Comment

0 Comments