கட்டாரில் இருந்து 282 பேருடன் இங்கிலாந்து சென்ற
விமானத்தில் வெடிபொருள் இருப்பதாக தகவல் வந்ததையடுத்து, இங்கிலாந்தின் போர்
விமானத்தின் பாதுகாப்புடன் அந்த விமானம் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டது.
கட்டாரின்
டோஹாவில் இருந்து 269 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் கட்டார் விமான
சேவைக்கு சொந்தமான விமானம் இங்கிலாந்தின் மென்செஸ்டர் நகருக்கு நேற்று
புறப்பட்டது.
விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது கட்டார் விமான
சேவை நிறுவனத்திற்கு வந்த தகவலில், விமானத்தில் வெடிபொருள் இருப்பதாக
கூறப்பட்டது.
இந்நிலையில., இங்கிலாந்து விமான நிலைய அதிகாரிகளுக்கும்
விமானிக்கும் இதுகுறித்து அறிவிக்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து
மென்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதற்கும்
இறங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது. பின்னர் கட்டார் பயணிகள் விமானம்
பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டது.
தரை இறக்கப்பட்ட விமானத்தில்
நடத்தப்பட்ட சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்று தெரியவந்தது.
விமானத்தில் வெடிபொருள் இருப்பதாக பீதியை கிளப்பிய நபர் தற்போது கைது
செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments