தனது ஒருமாத குழந்தையை தாக்கி அந்த குழந்தை காயங்களுடன் காணப்படும் புகைப்படத்தினை பேஸ்புக்கில் பிரசுரித்த பிரான்ஸை சேர்ந்த தந்தை ஒருவர் மீது துஸ்பிரயோக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேடிக்கைக்காக தான் இந்த செயலை செய்துள்ளதாக அவர் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்பட்டத்தினை சமூக இணையத்தளத்தில் பார்வையிட்ட அவரது நண்பர் பொலிஸாரிடம் இதனை கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பொலிஸார் குழந்தையின் பெற்றோரை கைது செய்துள்ளனர்.
தனது கணவர் குற்றம் செய்வதை அறிந்த நிலையிலும் அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்க தவறிய குற்றத்திற்காக குழந்தையின் தாயும் கைது செய்யப்படுள்ளார்.
இந்த சம்பவதை பொலிஸாருக்கு தெரியப்படுத்தினால் தனது கணவர் தன்னை விட்டு விலக்கிவிடுவார் என்ற காரணத்தினால் அது தொடர்பாக பொலிஸாரிடம் முறையிடவில்லை என மனைவி தெரிவித்துள்ளார்.

0 Comments