தேசிய தாய்ப்பால் கொடுக்கும் வாரம் இன்று (01) தொடக்கம் எதிர்வரும் 7ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாரத்தை பிரகடனப்படுத்துவதற்கான பிரதான நிகழ்வு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தலைமையில் எதிர்வரும் 5ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிள்ளைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை மேம்படுத்தல்- பாதுகாப்பு மற்றும் சக்தி வழங்குதல் என்பவற்றினூடாக 2015ஆம் ஆண்டை அபிவிருத்தியை நோக்கிக் கொண்டு செல்லும் நோக்கில் தாய்ப்பால் கொடுப்போம்- வாழ்க்கையை வெல்லுவோம்’ என்ற தொனிப்பொருளில் இவ்வாண்டு தாய்ப்பால் வழங்கும் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்

0 Comments