அநுராதபுரப் பகுதியில் பாரிய வெளிச்சத்துடன் மர்மப் பொருளொன்று
விழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். திங்கட்கிழமை இரவு 8
மணியளவில் பாரிய வெளிச்சத்துடன் மர்மப்பொருள் பெரும் சத்தத்துடன்
வானிலிருந்து விழுந்ததாக தெரியவருகிறது.
இந்த மர்மப்பொருள் எரிகல்லா அல்லது வேறு ஏதேனும் பொருளா என்பது தொடர்பில் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு இச்சம்பவம் தொடர்பில் பல முறைப்பாடுகள்
கிடைத்துள்ளதாகத் தெரியவருகிறது. தம்புள்ளையிலிருந்து சேருவில பகுதி
வரையிலான குடியிருப்பு பகுதிகளிலுள்ள மக்கள் இப்பாரிய வெளிச்சத்தைக்
கண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.jm


0 Comments