எஸ்.எச்.எம்.வாஜித்
மன்னார் மாவட்டத்தில் முசலி
பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சிலாபத்துறை ஊடாக புத்தளம் செல்லும்
பிரதான வீதியில் அமைந்துள்ள ஹுனைஸ் பாருக் நகரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட
மன்-ஹுனைஸ் பாருக் கலவன் பாடசாலையினை நேற்று 11-08-2014 காலை 9 மணியலவில் பிரதம
அதிதியாக வருகை தந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய
தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக துறை அமைச்சருமான அல்-ஹாஜ் றிசாட்
பதியுதின் திறந்து வைத்தார்.
இதில் அமைச்சர் றிசாட் கருத்து தெரிவிக்கையில்
இந்த நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தினால் எமது முசலி பிரதேசம்
அழிந்துள்ளது. அதனை நாங்கள் மீள பெற வேண்டும் என்றால் கல்வின் ஊடாக மட்டும்
தான் பெற முடியும். எனவே ஆசிரியர்கள், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு
கல்வியின் மகிமை பற்றியும் அதன் பெறுமதி பற்றியும் எந்த நாளும்
கற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் இன் நிகழ்வில் சிறப்பு
அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக்,விசேடி அதிதியாக வடமாகண சபை
உறுப்பினர் றிப்கான் பதியுதின், இலங்கை கனிய வள நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அலிக்கான் சரீப் மற்றும் முசலி பிரதேச செயலாளர்
செல்லத்துறை கேதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இத் திறப்பு விழா சுமார் 11 மணியலவில் இனிய ஸலவாத்துடன் நிறைவடைந்தன.




0 Comments