Subscribe Us

header ads

இலங்கை, பாகிஸ்தான் டெஸ்ட் 01; நாள் 02

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் முடிவில் 88 ஓவர்களை எதிர் கொண்டு 4 விக்கெட் இழப்பிற்கு 261 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 
 
இதில் யூனுஸ் கான் ஆட்டமிழக்காமல் 133 ஓட்டங்களையும், ஆஷட் ஷபிக்  ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.
 
இன்று இரண்டாம் நாள்போட்டி தேனீர் இடைவேளை வரை துடுபடித்தாடிய பாகிஸ்தான் அணி மொத்தமாக 141 ஓவர்களை எதிர் கொண்டு சகல விக்கெட்களையும் இழந்து 451 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் யூனுஸ் கான் 177 ஓட்டங்களை பெற்றது குரிபிடத்தகதாகும்.

 முதல் இனிக்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி 34 ஓவர்களை எதிர் கொண்டு 1 விக்கெட் இழப்பிற்கு 99 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.  
 
இதில் கே சில்வா ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களையும், சங்ககாரா  ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். 




  

Post a Comment

0 Comments