Subscribe Us

header ads

(UPDATED) 295 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுப் படையால் சுட்டுத் தள்ளப்பட்டது:யுக்ரைன் உள்துறை அமைச்சகம்…(வீடியோ இணைப்பு)

நெதர்லாந்தில் இருந்து 295 பேருடன் மலேசியா கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுப் படையால் சுட்டுத் தள்ளப்பட்டது என யுக்ரைன் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது 
எம்.ஹெச். 17 என்ற அந்த விமானம் யுக்ரைனில் ரஷ்ய எல்லைக்கு அருகே செல்கையில் ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுப் படை தீவிரவாதிகள் ஏவுகனை வீசித் தாக்கியுள்ளனர் . இதையடுத்து விமானம் ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்நிலையில் விமானம் எரிந்துவிட்டதாகவும் அதில் பயணம் செய்த 280 பயணிகள் மற்றும் 15 சிப்பந்திகள் என 295 பேருமே உடல் கருகி இறந்துவிட்டதாகவும் உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுட்டுத் தள்ளப்பட்ட விமானம் போயிங் 777-200 ரகத்தைச் சேர்ந்தது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 71 என்ன ஆனது என்று தெரியாமல் உள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .

Post a Comment

0 Comments