Subscribe Us

header ads

ஜனாதிபதித் தேர்தல் ; பொது வேட்பாளரை நிறுத்தும் நோக்கில் புதிய அரசியல் கட்சி உருவாக்கம்!

எதிர்வரும் ஜனாபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் நோக்கில் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய இலங்கை சுதந்திரக் கட்சி என்ற பெயரில் இந்தக் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது,

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதே இந்த கட்சி உருவாக்கத்தின் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து அதிருப்தி அடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில சிரேஸ்ட உறுப்பினர்கள் இந்த கட்சி உருவாக்கத்தின் பின்னணியில் செயற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனியாக வேட்பாளரை நிறுத்தினால், இந்த புதிய கட்சி பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏனைய எதிர்க்கட்சிகள் யாருக்கு ஆதரவளிப்பது என்பதனை இன்னமும் நிர்ணயிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.(GTN)

Post a Comment

0 Comments